சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தவிர்க்கும் வழிமுறைகள்
பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் வரும். குளிர்க் காலத்தில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். புதினா டீ, சுக்கு மல்லி டீ, துளசி டீ, இஞ்சி டீ, போன்றவற்றைப் பருகலாம்.
மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரத் தொடங்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் எளிதில் தாக்கும் இந்த தொற்றுநோய்கள். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்பதே படு அவஸ்தையான காலம். உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால் இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்கவிடாமல் கடந்துவிடலாம். மேலும் இதை பற்றிய விரிவான காணொளியை பார்த்து பயனடையுங்கள்.