மூக்கடைப்பு, இருமல், ஜலதோஷம் குணமாக உதவும் இஞ்சி கசாயம் இரவில் இதை அருந்தினால் நன்கு தூக்கம் வரும்
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது இஞ்சி கசாயம் வைக்கும் முறை, இஞ்சி கசாயம் என்னென்ன நல்ல பலன்களைக் கொடுக்கிறது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இஞ்சி என்றாலே இஞ்சுதல் என்று பொருள். இஞ்சிக்கு அஞ்சாவது எதுவுமே இல்லை இப்படி இஞ்சியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் இஞ்சியில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கியமான தாதுக்களும் விட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூக்கடைப்பு, மூச்சுப் பாதையில் அலர்ஜி, மூச்சுப் பாதையில் உள்ள சிறு நுண் கிருமிகளை அளிக்கவும் இந்த இஞ்சி உபயோகப்படுத்துதல் மிகுந்த பலன் அளிக்கும்.
இதனை இரவு வேளையில் உணவிற்குப்பின் நீங்கள் சேர்த்துக் கொண்டால் மேற்கூறிய அனைத்து பலன்களும் எளிதில் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் இதனை எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்யலாம் என்பதனை பற்றி தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்…