சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீரை சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்.தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. இதலால் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.
மேலும் பிளாஸ்டிக் கேனின் உள்ளே இருக்கக்கூடிய டாலேட் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் தண்ணீருடன் கலக்கும் போது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக நீரானது ஆர்.ஓ ப்ளாண்ட்டின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் கிடைக்கிறது. அந்தந்த ப்ளாண்ட்களில், தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது. மேலும், தண்ணீர் சுத்திகரிப்பின்போது, அமில மற்றும் காரத்தன்மையை அகற்றுவதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன.
தண்ணீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் பிரபலமானது. அது அங்கு நிலவும் கால நிலைக்கும், அவர்களின் உடலுக்கும் ஒத்துப்போகும். ஆனால், நம் நாட்டின் சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகும் எனச் சொல்லிவிட முடியாது.
சாதாரணமாகத் தெருக்களில் உள்ள குழாய்களில் கிடைக்கும் நீரும், மாநகராட்சி நீருமே குடிப்பதற்குப் போதுமானது. அந்தத் தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துப் பயன்படுத்தினாலே போதுமானது. தண்ணீரில் இருக்கும் தாது உப்புக்களும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
இந்தத் தண்ணீரில் படிந்திருக்கும் நுண்துகள்கள், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை அகற்ற வேண்டும் என்பதற்காக, சில வேதிப்பொருட்களைக் கலந்து சுத்திகரிக்கிறார்கள். தண்ணீரின் அமிலத்தன்மை, காரத்தன்மையை நீக்க வேண்டும் என்பதற்காகவும் சுத்திகரிக்கிறார்கள். இந்தத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கண்ணாடி போல சுத்தமாகத் தெரியும். இப்போது மேலே சுத்தமாக இருக்கும் தண்ணீரை மட்டும் கேன் வாட்டர் தயாரிக்க எடுத்துக் கொள்கிறார்கள். சுத்திகரிப்பின் போது மாசுகள் அகற்றப்படுவது நல்ல விஷயமாக இருந்தாலும், தண்ணீரில் இயற்கையாகவே இருக்கும் சில உப்புச்சத்துகளும் சேர்ந்து இதனுடன் வடிகட்டப்பட்டுவிடுவதால் வெறும் தண்ணீராகவே நமக்குக் கிடைக்கிறது. இதனால், தண்ணீர் மூலம் நமக்குக் கிடைக்கும் கால்சியம், பொட்டாசி யம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன.
வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தால், முடிந்த வரை வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துச் சென்று பழகுங்கள்.
ஆர்.ஓ. என்பதன் பொருள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ். ஆர்.ஓ. செய்யப்பட்ட தண்ணீரில் உப்புச் சுவை இருக்காது. இந்த முறையில் தண்ணீரில் இருந்து உப்பு பிரிக்கப்பட்ட பிறகு கிடைக்கிற தண்ணீரையே நாம் உபயோகிக்கிறோம். தண்ணீரில் டிடிஎஸ் எனப்படுகிற டோட்டல் டிசால்வ்டு சாலிட்ஸ் அளவானது 2,100 மில்லிகிராம் – ஒரு லிட்டருக்கு இருக்க வேண்டும் என்பது மாசுகட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடுகிற அளவு. சில தண்ணீரில் இது கூடவோ குறைவாகவோ இருக்கும்.
ஆர்.ஓ. செய்யப்பட்ட தண்ணீரிலோ உப்புச் சத்து அறவே இருக்காது. நம் உடலில் உள்ள உப்பானது வியர்வை மற்றும் சிறுநீரின் வழியே வெளியேறும். அதை ஈடுகட்ட சாதாரண தண்ணீரை குடிக்க வேண்டும். ஆர்.ஓ. செய்யப்பட்ட தண்ணீரையே குடிப்பதால் இந்த உப்பு இழப்பு ஈடுகட்டப்படாது. உடலுக்கு தேவையான உப்புச் சத்து இல்லாவிட்டால் களைப்பாக உணர்வோம். சாதாரண தண்ணீரில் ஓரளவு கால்சியம் சத்தும் இருக்கிறது.
ஆர்.ஓ தண்ணீரில் இருந்து கால்சியமும் நீக்கப்படும்.வயதானவர்களும் பெண்களும் தொடர்ந்து ஆர்.ஓ. தண்ணீரை குடிப்பதால் கால்சியம் பற்றாக் குறைக்கு ஆளாகிறார்கள். அவர்களது எலும்பு ஸ்பாஞ்ச் போல மிருதுவாகும். லேசாக அடிபட்டால் கூட எலும்புகள் நொறுங்கிப் போகலாம்.
ஒருசில சுத்திகரிக்கப்பட்ட நீரை பருகும் போது லேசான இனிப்புச் சுவையுடன் இளநீர் போல இருப்பதை உணரலாம். அவர்கள் அதில் சேர்க்கிற ஒருவிதமான கெமிக்கலே அதற்கு காரணம். கொதிக்க வைத்து வடி கட்டிய தண்ணீரே ஆரோக்கியமானது. ஆர்.ஓ. செய்யப்பட்ட தண்ணீர் அனாவசியமானது.