மிகவும் பொதுவான இதய நோய் – coronary artery disease (CAD)
பெரும்பாலான மக்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான இதய நோய்( coronary artery disease) இதய தமனி நோய்.CAD என்பது இதயத்திற்கு ஆக்சிசன் மற்றும் இரத்தத்தை வழங்கும் இரத்த குழாய்கள் குறுகிய நிலையில் இருப்பதால் உண்டாகிறது அதற்கு காரணம் இதயத்தின் உள் சுவர்களில் தேவையற்ற கொழுப்புகள் படிவதாகும் .
இதன் அறிகுறிகள் பெரும்பாலும் நோயின் ஆரம்ப கட்டங்களில் ஏற்படுகின்றன .சில நபர்களுக்கு வெளிப்படையாக தோன்றாமல் இருக்கலாம் .
CAD- ன் அறிகுறிகள் :
- நெஞ்சுவலி ,
- வயிறு மற்றும் மேல் முதுகில் ஏற்படும் கணமான உணர்வு ,
- மூச்சு திணறல் ,
- மார்பில் கணமான உணர்வு ,
- களைப்பு.
CAD ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
- ஆண்கள் அதிக அளவில் இந்நோயினால் பாதிப்புக்குள்ளாகிறார்கள் .
- புகைத்தல், மது அருந்துதல் .
- உயர் இரத்த அழுத்தம்.
- உயர் இரத்த கொழுப்பின் அளவு.
- நீரிழிவு நோய்.
- அதிக எடை அல்லது உடல் பருமன்.
- மரபு வழியாக குடும்பத்தில் யாருக்காவது இதயநோய் இருந்தால் மற்றவருக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதய நோய் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை :
- தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல் .
- ஆரோக்கியமான உணவு பொருட்களை உட்கொள்ளுதல் .
- மது மற்றும் புகை பழக்கத்தை நிறுத்துதல் .
- புரதசத்து நிறைந்த உணவுகள் மாரடைப்பு வருவதற்கான பாதிப்பை குறைகிறது .
- சர்க்கரைநோய் உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.