முக்கிய தகவல்கள் மன அழுத்தம் பற்றி.

மன அழுத்தம் இன்று நிறையவே உண்டு

மன அழுத்தம் குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை உடம்பில் உள்ள அனைத்து பாகங்களைப் பாதிக்கக் கூடியது இந்த மன அழுத்தம். ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு குறைவு.

 

1.மன அழுத்தம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது ?

மன அழுத்தமானது பொதுவானது அல்ல அதன்  அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நிலை பாதிப்படைவதுடன், மனச்சோர்வும்ஏற்படும்.

 

2.மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வு  சம்பந்தப்பட்ட  நோய்கள்?

●அதிகரித்த கவலை,

●மனக் குழப்பம்,

●மனக் கலக்கம் ,

●எளிதில் எரிச்சலுறல்

●கோவம் வருதல்,

●மனதை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல்,

●தனிமையாக உணர்தல்,

●மனச்சோர்வு

 

3.மன அழுத்தத்தால் ஏற்படும் உடல் சம்பந்தப்பட்ட  நோய்கள்?

●தலைவலி,

●நெஞ்சுவலி

●வயிற்றுப்போக்கு (Diarrhoea)

●மலச்சிக்கல், (Constipation)

●குமட்டல் (Nausea),

●தலைச்சுற்றல் (Dizziness), ●அதிகரித்த இதயத் துடிப்பு

 

4.மன அழுத்தத்தால்  பழக்கவழக்கங்களால்

ஏற்படும் மாற்றங்கள் ?

●மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல், ●அதிக தூக்கம்அல்லது தூக்கமின்மை, ●சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்,

●பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல்,

●வேலைகளை செய்வதில் குழப்பம்

●போதைக்கு அடிமையாகுதல்.