பன்னீர் திராட்சையின் 6 முக்கிய மருத்துவ பயன்கள்

பன்னீர் திராட்சையில் குறைந்த புளிப்புத்தன்மையும் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் உண்டு. அரைக்கிலோ அளவு கொண்ட திராட்சை பழத்தை சாப்பிடுவது என்பது ஒரு நேர உணவு உட்கொள்ளுவது என்பதற்கு சமம். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகமே தவிர டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. உலர்ந்த திராட்சையையும் நாம் பயன்படுத்தலாம். பல நூறு ஆண்டுகளாகவே இந்த உலர் திராட்சையானது உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயணத்தின் போது இந்த உலர் திராட்சை சாப்பிட்டால் சோர்வில்லாமல் பயணம் செய்யலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.

பன்னீர் திராட்சையின் மருத்துவ பயன்கள்

1. பன்னீர் திராட்சையில் உள்ள டேரோஸ்டில்பேன் என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும். எனவே, கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள்.

2.திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.திராட்சையில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக நிறைந்துள்ளது. இதில் விட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் விட்டமின் சி ஈறுகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு காரணமாகிறது.

3.பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும்.திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும். ஆகவே,சுவாச பிரச்சனை இருப்பவர்கள், பச்சை திராட்சையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்லது.தசைகளின் செயல்பாட்டிற்கு முக்கியமான எலக்ட்ரோலைட்டுக்கள் எனும் கனிமச்சத்து பச்சை திராட்சையில் உள்ளன. இந்த கனிமச்சத்தானது உடலில் நீர்ச்சத்து மற்றும் இரத்தத்தில் அமிலத்தின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

4.தினமும் சிறிது பச்சை திராட்சை உட்கொண்டு வருவதன் மூலம் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும்.உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும்.திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் மற்றும் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.

5.கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள் இப்பழத்தினை எடுத்துக்கொண்டால் அது சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.உடல் வளர்ச்சி குறைந்தவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை கொண்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் குணம் பெறலாம்.திராட்சையில் அதிகபடியாக இரும்பு சத்து, தாமிர சத்து போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, பி6, சி, கே இருக்கின்றன.  மேலும் குடல் புற்று நோய், ப்ராஸ்டேட் புற்றுநேயைத் தடுக்கும்.

6.குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன.சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து அதனுடம் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்பன்னீர் திராட்சை செரிமானத்தைச் சீராக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கிறது. மேலும் சிறுநீரகத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது.