நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளு குளு நெல்லிக்காய் ஐஸ்கிரீம் | Next Day 360

நெல்லிக்காயில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பது நம் அனைவ்ருக்கும் தெரிந்ததுதான். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பல்வேறு ஆய்வுகளின்படி, நெல்லிக்காய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது, இது பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

இது மட்டுமின்றி, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. மொத்தத்தில், நெல்லிக்காய் மிகவும் ஆரோக்கியமான உணவாகும், எனவே இது நமது வழக்கமான உணவில் சேர்க்கப்பட வேண்டும்.

பலரும் இன்றய வாழ்வில் நெல்லிக்காயை உணவாக சேர்ப்பதில்லை முக்கியமாக குழந்தைகள் இதை கண்டாலே ஓடுகின்றனர். அதனால் நெல்லியை ஐஸ்கிரீம் முறையில் செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்தலாம் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுகள். #நெல்லிக்காய்_ஐஸ்கிரீம் # Nextday360