1.நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன?
நுரையீரலில் உள்ள திசுக்களில் மிக தீவிரமான உயிரணு வளர்ச்சியே நுரையீரல் புற்றுநோய்எனப்படுகிறது. இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான நுரையீரல் புற்றுநோய்கள் தோலின் மேல்புற உயிரணுக்களுடன் சேர்ந்து வளர்ந்து நுரையீரலின் தீவிரப் புற்றுநோயாக உண்டாகிறது. புற்றுநோய் உயிர் இழப்பில் முதன்மை வகிப்பது நுரையீரல் புற்றுநோயே .
2.நுரையீரல் புற்றுநோய் வருவதன் மூல காரணம் என்ன?
புகை பிடிப்பது ,புகை பிடிப்பவர்கள் அருகில் இருப்பது , தூசி மாசு அதிகமான இடத்தில் வேலை பார்ப்பது .
3.நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் ?
●புற்றுநோய் செல்கள் எலும்புகளில் பரவி, அவற்றை வலுவிழக்கச் செய்வதால் உடல் வலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான உடம்புவலி ஏற்படும். தொடர்ச்சியாக உடம்பு வலி இருப்பின் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியே.
●தொடர்ச்சியாக தொண்டையில் வலியோ அல்லது உணவை விழுங்கும்போது அதீதவலியோ ஏற்பட்டால், அது டிஸ்பேகியாவாக (Dysphagia) இருக்கலாம். டிஸ்பேகியா நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது.
●திடீரென அசாதாரணமான, அதிகளவு எடை இழப்பு ஏற்படும்.
●திடீரென அதிகளவு எடை இழப்பு ஏற்படுவதும் இதன் அறிகுறியே
●மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் வலி ஏற்படும் பொழுது அதை கவனிக்க வேண்டும். இதுவும் ஒரு அறிகுறி தான்.
4.நுரையீரல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் வழிமுறைகள்?
●புகைப்படிப்பதை நிறுத்த வேண்டும்:
90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் புகைபிடிப்பதாலே வருகின்றது – நேரம் காலம் பார்க்காமல் இப்பொழுதே புகைபிடிப்பதை நிறுத்துங்கள் – இல்லையேல் நீங்கள் குறைந்த வயதில் டிக்கெட் வாங்குவதை யாராலும் தடுக்கமுடியாது
●புகை பிடிப்பவர் அருகில் இருக்கவேண்டாம் .
துஷ்டனை கண்டால் தூர விலகு புகை பிடிப்பவர் அருகில் இருக்காதீர்கள் அவர்கள் உங்களுக்கு இலவசமாக புற்றுநோய் கொடுக்கின்றனர்
●ரேடான் வாயு:
ரேடான் என்பது இயற்கையாகவே மண் மற்றும் பாறைகளிலிருந்து உருவாகும் வாயு ஆகும். இதை நீங்கள் பார்க்கவோ, மணம் செய்யவோ அல்லது ருசி பார்க்கவோ முடியாது. இவற்றின் குறைந்த அளவு காற்று வெளிப்புறங்களில் உள்ள இயற்கையோட ஒன்றாகும் .
●பீட்டா கரோட்டின் உணவு:
பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் . இதைப் புகைபழக்கம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். அந்த உணவு வகைகள் பின்வருமாறு
பாகற்காய்,
கிர்னிபழம்,
மஞ்சல் நிற முலாம்பழம்,
கீரைவகைகள் ,
மிளகுத்தூள்,
பாதாமி பழம்,
பச்சை பட்டாணி,
ப்ரோக்கோலி,
குடமிளகாய் ,
மிளகாய் ,
parsley,
cilantro
marjoram
sage
coriander
●உடற்பயிற்சி:
தினம்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் மற்றும் உடல் நலத்திற்கு நல்லது.