தினை அற்புதமான சிறுதானிய உணவு வகை இது பண்டைய காலத்தில் இருந்து நமது பாரம்பரிய உணவாக நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது
சமீப காலத்தில் தான் இதை நாம் மறந்துவிட்டோம் கடந்த 40 ஆண்டுகளாக தான் இதை நாம் மறந்து விட்டோம் தினமும் ஒரு வேளை நாம் தினையை உட்கொள்வதால் இதிலுள்ள நார்ச்சத்து நமக்கு மலச்சிக்கல் வரவிடாமல் தடுத்து குடல் ,வயிறு, கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். தினமும் தினை கஞ்சி சாப்பிட்டு வந்தால் ஜீரண திறன் அதிகமாகும்
தினையை இடித்து களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு நரம்புகள் முறுக்கேறும் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து வறட்டுத்தன்மை நீங்கி ஆண்மை குறைபாடு விலகி ஆரோக்கியமான இல்லற வாழ்க்கையை வாழலாம்
தினையை நாம் உட்கொள்வதன் மூலம் இதில் உள்ள புரதச்சத்து தோலில் உள்ள சுருக்கங்களை நீக்குகின்றது அதுமட்டுமல்லாமல் சருமத்தில் பளபளப்பு தன்மையை அதிகமாகிறது மேலும் தசைகளை வலிமையாக்குகிறது
அல்சைர் எனப்படும் ஞாபக சக்தி நோயை இந்த தினை குணப்படுத்துகிறது தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால் அதிகமாக்கி ஞாபக மறதி நோயில் இருந்து நம்மை காப்பாற்றி இருக்கின்றது
இது கொழுப்பு அறவே இல்லாத ஒரு உணவு இது கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உட்கொண்டால் நீரிழிவு நோய் எனபடும் சர்க்கரை நோய் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்
மேலும் எலும்பு இதயம் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு சத்துக்களை கொடுக்கும்
நல்ல மருத்துவ குணம் கொண்ட உணவு பொருளாக தினை இருக்கிறது
தினமும் காலையில் வைப்போம் தினை அரிசி பொங்கல்
தேவையான பொருட்கள் :
திணை அரிசி – ஒரு கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
மிளகு – 2 டீஸ்பூன்,
உப்பு , நெய் – தேவைக்கு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் – சிறிதளவு,
முந்திரி – 10.
செய்முறை :
பச்மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோலை நீக்கி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
திணை அரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த அரிசி, பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, நான்கு கப் தண்ணீர் சேர்த்து குழையும் வரை வேக விடவும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து கலந்தால்
அவ்வளவு சுவையான சத்தான காலை உணவு
தயார்.