தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள்

தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறை

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான ஐந்து காரணங்களை இப்போது பார்ப்போம் 

வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு  தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது . தலை வலி ஏற்படுவதன் முக்கிய காரணங்களை இப்பொழுது பார்ப்போம்

1.கண் தொடர்பான நோய்கள்

கண் பார்வைக்கும் தலைவலிக்கும் சம்மந்தம் உண்டு ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால்  கண்வலி மட்டுமில்லாமல்  தலைவலியும் ஏற்படலாம்.

2.டிரைஜெமினல் நியூரால்ஜியா ( trigeminal neuralgia )

நாற்பது  வயது கடந்தவர்களுக்கு இது ஏற்படும் . ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு அதிகம் . மின் அதிர்வு போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும்.  மேலும் பொழுது , பேசும் பொழுது , விழுங்கும் பொழுது , குளிர்ந்த நீரில் முகம் கழுவும் பொழுது , பல் துலக்கும் பொழுது இது   போன்ற  செயல்களை செய்யும் பொது தலையில்  வலி ஏற்படும்.

3.பக்கவாதம்

இரத்த கொதிப்பினால்  மூளையில் உள்ள  ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமணி  வெடித்தாலோ மூளையில்  இரத்த கசிவு ஏற்பட்டாலோ அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

இது மிக ஆபத்தான ஒன்று உங்கள் தலையை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு .

4.தலைச்சுற்றல்

இது காதின் மத்தியில்  நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கற்ற செயல்களால்  ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். உளவியல் ரீதியான பிரச்சனைகள் மனச்சோர்வு, பதட்டம், ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

5.சைனஸ் மற்றும் பல்லினால் ஏற்படும்   தலைவலி

கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு இருந்தால்  தலை வலி ஏற்படும். பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும் பொழுது  மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

6.தைராய்டு குறைவு

தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைந்தால்  தலைவலி ஏற்படும் .

தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

எட்டு மணி நேரம் உறங்கவும், தூக்கம் மிக முக்கிய காரணம் .

உணவு உட்கொள்வதில் கவனம் தேவை

தலைவலியைத் தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கவும். உதாரணம் அதிக நேரம் mobile போனை படுத்துதல் முக்கியமா இரவு நேரங்களில் .

எரிச்சலூட்டும் உரத்த இரைச்சலைவிட்டு விலகி இருக்கவும்.

முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்.

வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.