சர்க்கரை நோய் என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமது உடம்பு நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் இப்படி மாற்றுவதற்கு தேவையாக இருப்பது இன்சுலின். நமது உடலில் இன்சுலின் உற்பத்தி குறைந்தாலோ அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போனாலோ தேவையான சக்தியாக மாற்ற முடியாத சர்க்கரை நேராக இரத்தத்தில் கலக்கின்றது , இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகமாகின்றது இதுதான் சர்க்கரை நோய் , நீரழிவு நோய் , diabetes என்ற அழைக்கப்படுகிறது . அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்ளுவது தவறு அப்படி உட்கொண்டால் அதற்கு தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யும் உணவுகளை உண்ணவேண்டும் இல்லையேல் ஆபத்தில் தான் போய் முடியும் .
சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்பு என்ன ?
●இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும்
●வெகு நாட்களாக சிறுநீரக கோளாறு இருத்தல்
●பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும்
●இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இரத்தம் செல்லும் அளவு மாறும்
●சர்க்கரை அதிகமாகி போனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்
●உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்
அளவிற்கு அதிகமாக பசி எடுக்கும்