கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின் ? what is Fat soluble vitamins ?

கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின் ? what is Fat soluble vitamins ?

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் Fat soluble vitamins என்பது உணவை உட்கொண்டபின் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உணவில் உள்ள கொழுப்புகளுடன் சேர்ந்து உடலில் உள்ள கொழுப்பு திசுக்களிலும் கல்லீரலிலும் சேமிக்கப்படுகின்றன.

அவை சைவ மற்றும் அசைவ உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின்கள் பின்வருவன வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை (vitamin A , vitamin D , vitamin E ,vitamin K ) .

கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின்களினால் என்ன பயன் ? benefits of Fat soluble vitamins.

vitamin A எதற்கு தேவை ?

வைட்டமின் ஏ (vitamin A) என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது இயற்கையாகவே பல உணவுகளில் உள்ளது.

பார்வை பராமரிப்பு (Vision care)

கண்களில் ஒளி உணரும் செல்களை பராமரிக்கவும், கண்ணீர் திரவம் உருவாகவும் வைட்டமின் ஏ அவசியம்.

நோயெதிர்ப்பு செயல்பாடு (Immune function)

வைட்டமின் ஏ குறைபாடு நோயெதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கிறது, நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது .

உடல் வளர்ச்சி (Physical development)

உயிரணு வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ அவசியம். வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளின் வளர்ச்சியை மெதுவாக்கலாம் அல்லது தடுக்கலாம் .

முடி வளர்ச்சி (Hair growth)

இது முடி வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. வைட்டமின் ஏ குறைபாடு அலோபீசியா அல்லது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது .

இனப்பெருக்க செயல்பாடு (Reproductive function)

வைட்டமின் ஏ கருவுறுதலைப் பராமரிக்கிறது (Maintains fertility ) மற்றும் கருவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது (For fetal development) .

வைட்டமின் டி

ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது.
நோயெதிர்ப்பு, மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்தை ஊக்கப்படுதும்
இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீரிழிவு நோய் காட்டுக்குல் வைக்க உதவுதல்
நுரையீரல் செயல்பாடு மற்றும் இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

1.எலும்புகள் வலுப்பெற

கால்சியத்தை ஒழுங்குபடுத்துவதிலும், இரத்தத்தில் பாஸ்பரஸ் அளவை பராமரிப்பதிலும் வைட்டமின் டி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க வைட்டமின்-டி மிக முக்கியமானவை.

இதேபோல், பெரியவர்களில், வைட்டமின் டி குறைபாடு ஆஸ்டியோமலாசியா osteomalacia வை ஏற்படுத்துகிறது . ஆஸ்டியோமலாசியா எலும்பு அடர்த்தி மற்றும் தசைகலை பலவீனமாக்குகிறது இதனால் வைட்டமின் டி நமக்கு தேவை .

2. வைட்டமின் டி மன அழுத்தத்தை குறைக்கிறது .

மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு மனச்சோர்வை தடுப்பதற்கும் வைட்டமின் டி முக்கிய பங்கு வைக்க கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகின்றன வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இந்த மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது அதற்காக நீங்கள் மருந்துகளை உட்கொள்வது பதிலாக விட்டமின் டி என்பது உணவில் இருக்கிறதோ அதை உட்கொண்டால் போதும்.

3. வைட்டமின் டி எடை இழப்பை அதிகரிக்கும்

நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்றீர்கள் என்றாலோ அல்லது இதய நோய்களை தடுக்க முயற்சிக்கிறீர்கள் என்றாலோ நீங்கள் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டியது வைட்டமின் டி இந்த வைட்டமின் டி உங்கள் உணவில் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டால் உங்கள் எடை குறையும் இதய நோயும் கட்டுக்குள் இருக்கும்.

 

வைட்டமின் E

வைட்டமின் ஒரு கொழுப்பில் கரையக்கூடிய அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்

  • நோய் எதிர்ப்புக்கு தேவைப்படும்
  • உயிரணு செயல்பாட்டிற்கு தேவைப்படும்
  • தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்க விட்டமின் தேவைப்படும்

இது ஒரு ஆக்சிஜனேற்றி ஆகும் இது பிரிரேடிக்கல்ஸ் எனப்படும் பொருட்களால் ஏற்படும் சேதத்தின் இருந்து உடல் திசுக்களை பாதுகாக்கிறது .

இந்த வைட்டமின் E வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் அதோடு மட்டுமின்றி சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின்-இ அதிக பங்கு வைக்கிறது.

வைட்டமின் ஈ நாள் புற்றுநோய் , இதய நோய் , கல்லீரல் நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

வைட்டமின் E தினசரி நம் உணவில் எடுத்துக்கொள்வது முக்கியம்.

வைட்டமின் K 

வைட்டமின் கே என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஒன்றாக கருதப்படுகிறது.

இரத்த உறைவு மற்றும் எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த புரோத்ரோம்பின் என்ற புரத்தை உற்பத்தி செய்ய உடலுக்கு தேவையான வைட்டமின் கே தேவைப்படுகிறது.

மேலும் வைட்டமின் கே

  • எலும்பு ஆரோக்கியம் மற்றும்
  • அறிவாற்றலை அதிகப்படுத்துவதற்கு மற்றும்
  • இதய ஆரோக்கியத்திற்கு அதிக பங்கு வகிக்கிறது.

கொழுப்பில் கரையக்கூடிய இந்த நான்கு வைட்டமின்களும் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது இதை நாம் தினசரி உணவை உட்கொண்டு வந்தால் நம் உடம்பில் எந்த ஒரு நோயும் வராமல் இருக்கும்.