கேழ்வரகில் இருக்கும் நான்கு முக்கிய அமீனோ அமிலங்கள்

கேழ்வரகு

கேழ்வரகு வறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை. இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் , தமிழ்நாடும் கர்நாடகமும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் கேழ்வரகு பயிராக்கப்படுகிறது.

கேழ்வரகின் சத்துக்கள்

கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய ‘கார்போ ஹைட்ரேட்’ பொருட்கள் அதிகமாக இருக்கிறது 100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகளும் 1.3 சதவீதம் கொழுப்பும் புரதம் 7.7 சதவீதமும் நார்ச்சத்து 3.6 சதவீதமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் அதிக அளவு தாது உப்புகள் உள்ளது. முக்கியமாக அதிக அளவில் கால்சியம் நார்சத்தும்  உள்ளது. குறைந்த அளவு இரும்புச்சத்தையும் கொண்டுள்ளன.மற்றும் கேழ்வரகில் வலைன், ஐசோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தையோனைன் எனும் அமீனோ அமிலங்கள் உள்ளது.


வலைன் அமினோ அமிலம்

வலைன் அமினோ அமிலம்  திசுக்களை சரிசெய்வதற்கும், இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கும், உடலுக்கு ஆற்றலை வழங்குவதற்கும் உதவுகிறது. வலைன் அமினோ அமிலம் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்ட உதவுகிறது, மேலும் சரியான மன செயல்பாடுகளுக்கு இது தேவைப்படுகிறது.

ஐசோலியோசின்

கேழ்வரகில் இருக்கும் ஐசோலியோசின் தசை திசுக்களை குணப்படுத்தவும் சரி செய்யவும் பயன்படுகிறது , இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்க உதவுவதன் மூலம் ஆற்றல் மட்டங்களை நிலையாக வைத்திருக்கிறது .

டிரையோனைன்

இது பல்வேறு வகையான மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்க மிகவும் உதவியாக இருக்கும். இந்த அமினோ அமிலம் எலாஸ்டின், கொலாஜன் மற்றும் பற்சிப்பி புரதத்தை உருவாக்குகிறது, மேலும் கல்லீரலில் சரியான கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இறுதியாக, டிரையோனைன் செரிமான மற்றும் குடல் பாதைகளை மிகவும் சீராக செயல்பட உதவுவதற்கும், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவுவதற்கும் பெயர் பெற்றது இந்த அமினோ அமிலம்

டிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன.

மீத்தையோனைன்

மீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது. லிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது. இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.

கேழ்வரை நாம் அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் பயன் படுத்தினால் எண்ணற்ற பல வியாதிகளை வரவிடாமல் தடுக்கிறது