காலிஃபிளவர் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய 8 முக்கிய விசயங்கள்

[box type=”shadow” align=”” class=”” width=””]நிறைய காய்கறிகள் எடை இழப்பிற்கு நார்ச்சத்தும் உடல் பலம் பெற வைட்டமின்கள் என நிறைய பயன்களைக் கொண்டுள்ளன.அவற்றில் ஒன்றானதும் ஒரே சமயத்தில் ஆரோக்கியமான நிறம், அதிகரித்த ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த எடை குறைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் காலிஃபிளவர் பற்றி இங்கு காணலாம்.[/box]

1.காலிஃபிளவரில் உள்ள சத்துக்கள்

குறைந்த கலோரிகள்,புரதம்,கொழுப்பு,கார்போஹைட்ரேட்,கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம்,வைட்டமின் C, வைட்டமின் K, வைட்டமின் B,ஃபோலேட். மேலும் இதில் சிறிய அளவிலான தியாமின், ரைபோஃப்ளேவின், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு ஆகியவை உள்ளன.

2.காலிஃபிளவரில் உள்ளவை பற்றி ஒரு பார்வை

  1. புற்றுநோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகளை உள்ளது.
  2. எடை இழப்பு மற்றும் செரிமானத்தை தூண்டும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது
  3. கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு அவசியமான கோலின் கொண்ட காய்.

3.செரிமானத்தில் காலிஃபிளவர் பங்கு

மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், ஆரோக்கியமான செரிமானப் பாதையை பராமரிப்பதற்கும், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து பேருதவி புரிகிறது. இதன் விளைவாக, இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் உடல் பருமன் போன்ற அழற்சி தொடர்பான நிலைமைகளின் ஆபத்தை குறைக்க இது உதவும்.

4.அதிக நார்ச்சத்தை உட்கொண்டால் வரும் நன்மைகள்

அதிக நார்ச்சத்தை உட்கொண்டால் இதய நோய்,பக்கவாதம்,உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு,சில இரைப்பை குடல் நோய்கள் போன்றவற்றை குறைத்தல், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதல், உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடை இழப்பை அதிகரித்தல் போன்ற நல்ல விளைவுகளை அதிகரிக்கிறது.

5.புற்றுநோய்க்கு மருந்தாகும் சல்போராபேன்

காலிஃபிளவர் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளதால் செல்லுலார் பிறழ்வுகளைத் தடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இவை பொதுவாகவே  முட்டைக்கோசுகள் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றில் காணப்படுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்களில் மார்பக மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது. மேலும் நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பை குறைப்பதிலும் தொடர்புடையது. சல்போராபேன் எனப்படும் சல்பர் கொண்ட கலவைகள் பல வகையான புற்றுநோய்களுடன் போராட உதவும் தன்மை கொண்டது.இது காலிஃபிளவரிலும் உள்ளது.

6.ஒரே பொருள் பல பலன்களைக் கொண்ட கோலின்

கோலின் என்பது காலிஃபிளவரில் உள்ள ஒரு முக்கிய காரணி. இது தூக்கம், தசை இயக்கம், கற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிப்பு போன்றவற்றிற்கு  உதவுகிறது.மேலும் இது செல்லுலார் சவ்வுகளின் கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பரப்புவதற்கும் கொழுப்பை உறிஞ்சுவதற்கும் நாள்பட்ட அழற்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது.

7.சிறுவயது முதல் எலும்புகளை வலுவாக்க

வைட்டமின் K குறைந்த அளவு உட்கொள்வது எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற மூட்டு வலியுடன் தொடர்புடையது. எனவே வைட்டமின் K அதிகமுள்ள காலிஃபிளவரை உட்கொள்வதின் மூலம்    கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தி, சிறுநீரில் கால்சியம் வெளியேற்றப்படுவதைத் தடுத்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

8.காலிஃபிளவரால் வரும் அபாயங்கள்

எந்த இயற்கை உணவுகளையும் அளவாக எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் தோன்றாது. அதுபோல் காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வதால் வீக்கம் மற்றும் வாய்வு, இரத்த உறைவு போன்றவை தோன்றலாம். எனவே அளவோடு உண்டு ஆரோக்கிய வாழ்வை பெற்றிடுங்கள்.