இயற்கை vs செயற்கை – உணவே மருந்து தமிழ் – unave marunthu tamil
இயற்கை மற்றும் செயற்கை
இயற்கையா அல்லது செயற்கையா ? நாம் பயன்படுத்தும் முக்கால்வாசி செயற்கைதான் அது ரசாயன உரத்தில் இருந்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் உணவு பண்டங்கள் வரை அனைத்தும் செயற்க்கையாகிப்போனது , இன்று நமக்கு உண்டாகும் பல நோய்களுக்கு காரணம் இந்த செயற்கை தான் . அது என்ன செயற்கை ? என்று நீங்கள் கேட்கலாம் . ஒரு சிறிய உதாரணம் – தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு சிறிய விளம்பரம் ஒரு குளிபான விளம்பரம் முழு மாம்பழத்தின் சுவை இதில் உள்ளது என்று கூறுகிறது அந்த விளம்பரத்தை பார்க்கும் நம் கண்களும் மூளையும் அதை ருசி பார்த்து விட வேண்டும் என்று சொல்லும்.
ஆனால் நமக்கு அந்த குளிர்பானத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கின்றது தெரியுமா ?
For example, a typical carbonated soft drink will have 200 calories in a 16-ounce serving. All of those calories come from sugar, and sugar contains 16 calories per teaspoon. By this measurement, a 16-ounce serving contains 12.5 teaspoons of sugar.
அந்த சர்க்கரை உடலில் சென்று என்ன செய்யும் ? அது எவ்வளவு அதிகப்படியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நமக்கு தெரிந்தாலும் நம் மனதும் நமது ஆசையும் அதை சுவைக்க சொல்கிறது அதை நாம் உட்கொள்கின்றோம் என்று வைத்து கொள்வோம் , அதை நாம் தொடர்ச்சியாக உட்கொள்ளும் பொழுது நமக்கு முதலில் ஏற்படும் நோய் என்ன தெரியுமா ? நீரிழிவு – அதாவது சர்க்கரை நோய் .
இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்தால் நன்று இல்லையேல் இன்றே தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தான் உண்மை. சரி கண்டிப்பாக அந்த குளிர்பானத்தை குடித்தே ஆக வேண்டுமா ? நமது ஆசையும் நாவின் ருசியும் உங்களை ஒரு சர்க்கரை நோயாளியாக மாற்றிவிடும் .
“ஒரு முழு மாம்பழத்தை சாப்பிட்டால் இந்த நிலை நமக்கு ஏற்படாது ” இதற்கு மாற்று என்ன ? இயற்கை கொடுத்த பழங்கள் இருக்கின்றது மற்றும் பச்சை பசுமையாய் இளநீர் இருக்கிறதே அது போதாதா நமக்கு ? இந்த இளநீர் நீரிழிவு நோய்க்கு எதிரானது , சிறுநீரக கற்களைத் தடுக்க உதவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இவ்வளவு நன்மை இருக்கும் இளநீருக்கு மேலே எந்த குளிர்பானம் வேண்டும் ?
இது ஒரு சிறிய உதாரணம் இதை போல் நாம் அன்றாட வாழ்வில் உணவு பழக்கத்தில் இருக்கும் அனைத்து செயற்கைக்கும் மாற்றாக ஒரு இயற்க்கை உண்டு .விவசாயம் காப்போம் என்றுமே இயற்கையை தேந்தெடுப்போம் நலமாய் வாழுவோம்.